சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டக் நகரில் இன்று (19) நடைபெறவிருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸின் திடீர் விலகல் காரணமாக பேச்சுவார்த்தைகள் முறிந்து விட்டதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்காக, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் இன்று சுவிட்சர்லாந்தில் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.



