பிரான்சில் வாழும் இலங்கைத் தமிழர் மற்றும் இலங்கையர் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு மக்கள் ஆர்ப்பாட்டம் இன்று 28 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு பாரிஸ் நகரிலுள்ள Place de la République பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம்,“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குங்கள் – விசாரணைகளுக்கு இடையூறு செய்யாதீர்கள்”
என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும், நடைபெற்று வரும் விசாரணைகள் சுதந்திரமாகவும் தடையின்றியும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்துகிறது.
மேலும், விசாரணைகளின் மூலம் குற்றவாளிகள் என அடையாளம் காணப்படுபவர்கள் அவர்களின் பதவி, அதிகாரம் அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது



