ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் 10வது முழுமதியில் ஒரு கலைக்கூடல் நிகழ்வு.

events
Editor 2026-07-06 20:45:00

எஸ்.எம்.எம்.முர்ஷித்.

ஓட்டமாவடி பிரதேச செயலகம் மாதாந்தோறும் நடாத்தும் 'முழுமதியில் ஒரு கலைக்கூடல்” பௌர்ணமி தின நிகழ்வு நேற்றிரவு (29/06/2026) திங்கட்கிழமை ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள “ரிவர் பார்க்”கில் நடைபெற்றது.

இம்மாத நிகழ்வு மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா அரங்காக இடம்பெற்றதால் அவர் பற்றி பிரதேச கலைஞர்கள், எழுத்தாளர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், பிரதேச கலை மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச பாடசாலை மாணவர்களதும் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

“பிரதேசத்தின் மூத்த கல்விமான் ஏ.எம்.ஏ.காதர் எஸ்.எல்.எம்.ஹனீபா எனது மாணவன்” என்ற தலைப்பிலும், எழுத்தாளார் ஓட்டமாவடி அறபாத் “என்னை செதுக்கிய எஸ்.எல்.எம்” என்ற தலைப்பிலும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜமால்தீன் “எஸ்.எல்.எம்.ஹனிபாவுடைய சிறுகதைகள்” தொடர்பாகவும் ஓய்வுபெற்ற அதிபரும் எழுத்தாளருமான எச்.எம்.எம்.இஸ்மாயில் “எஸ்.எல்.எம்.ஹனீபாவின் எழுத்தும் அவரது ஆற்றலும்” தொடர்பாகவும் தனது கருத்துக்கள், நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களினால் எஸ்.எல்.எம்.ஹனீபாவுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு கௌரவம் வழங்கி வைக்கப்பட்டது.

எஸ்.எல்.எம்.ஹனீபாவின் ஏற்புரை இடம்பெற்றதோடு கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

தரிசு நிலமாகக்காணப்பட்ட இப்பிரதேசம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கான தளமாக மாற்றும் நோக்கில் மாதாந்தம் முழுமதியில் ஒரு கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தி பிரதேச மூத்த கலைஞர்களைக் கௌரவிப்பதுடன், இளம் கலைஞர்களுக்கு களமமைத்துக்கொடுக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றமை பிரதேச மக்களின் நன்மதிப்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail