ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்!

World
Editor 2026-07-08 10:10:00

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியான பெரும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் ஜலசந்தியில், கத்தார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றிச் செல்லும் கப்பல் மற்றும் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் கப்பல் உள்ளிட்ட மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.

அதன்படி, தெற்கு ஈரானில் உள்ள சிரிக், பந்தர் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவுகளைச் சுற்றியுள்ள ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோர கண்காணிப்பு மையங்கள், மற்றும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்களைக் குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தொடர்ச்சியான பெரும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

இதேவேளை, ஈரானுக்கு வழங்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைத் தளர்வை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா எடுத்துள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail