ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்று கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஓமானில் உள்ள கும்சார் கிராமத்திலிருந்து 15 கிலோமீட்டர் வடமேற்கே சென்று கொண்டிருந்தபோது கப்பல்களில் ஒன்று தாக்கப்பட்டதாக ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியது.
இந்தத் தாக்குதலின் விளைவாகக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியவில்லை, மேலும் கப்பல் குழுவினரை மீட்க ஓமானி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கிடையில், கார்க் தீவை ஆக்கிரமிக்க வரும் அமெரிக்கப் படைகளை வரவேற்க ஒரு குழுவினர் காத்திருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.



