தினச்சுடர் தேசிய விருது விழா-2026
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் உலமாக் கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் நேற்று (02) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பௌண்டேசன் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதழ்களை யும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழன் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஏ.எம்.ஜௌபர்,பௌண்டேஷனின் பணிப்பாளர் மரியம், சுயாதீன தொலைக்காட்சி தமிழ் செய்திப் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் மேலதிக பணிப்பாளர் எம்.இஸட்.அஹமட் முனவ்வர்,சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சித்தீக் காரியப்பர்,ராதா மேதா,பௌண்டேஷனின் ஒருங்கிணைப்பாளர்களான ஆகிப் மொஹமட்,இஸ்ஸத் மற்றும் ஊடகவியலாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.























