திராய்க்கேணி படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்! 

Provincial
Editor 2026-08-07 11:59:00

பாறுக் ஷிஹான்
 
அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க் கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் (06) மாலை அக்கிராமத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அக்கிராமத்து மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, இம்முறையும் படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் இந்நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கிராம மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீபமேற்றி, சிறப்புப் பூஜைகள் வழிபாடுகளை மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நினைவேந்தல் நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர்களான காந்தன், தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். .

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail