எஸ்.எம்.எம்.முர்ஷித்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஹுதா ஜும்ஆ பள்ளிவாயலின் நுழைவாயிலும் நிருவாக காரியாலயமும் இன்று வெள்ளிக்கிழமை (07) சுபஹ் தொழுகையின் பின்னர் திறந்து வைக்கப்பட்டது.
பள்ளிவாயலின் நிருவாகத்தலைவர் ஏ.எம்.யாக்கூப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை அந்ந்நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபு கல்லூரியின் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதன்போது, ஹுதா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள் ஊர் ஜமாத்தார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்களின் அயராத முயற்சியினால் பிரதேச தனவந்தர்களின் பங்களிப்புடன் இவ் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாயல் தலைவர் ஏ.எம்.யாக்கூப் தெரிவித்தார்.


















