புதிய அலை கலை வட்டம் மகளிர் அணியின் சர்வ தேச சகோதரிகள் தினம் அதன் தலைவி எழுத்தாளர் சுடரி தலைமையில் வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதா மேத்தா, வவுனியா மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா மாவட்ட வைத்தியசாலை சிரேஷ்ட வைத்திய அதிகாரி செல்வதுஷ்யந், உதவி வைத்திய அதிகாரி சிவநந்தினி, வெண்புறா அமைப்பின் இயக்குநர் தனம்செயம் காண்டீபன், அகில இலங்கை சற்சங்க சபை இயக்குநர் சைவமணி சிவமைந்தன், மேனாள் பீடாதிபதி பார்த்தீபன், முனைவர் மேழிக்குமரன், வவுனியா மாவட்ட காணிப் பதிவாளர் ( பதில்) லிசாந்தினி , சங்கமம் பிரித்தானியாக் கிளை தலைவர் சஜீந்திரா மற்றும் வவுனியா நகரின் முக்கியஸ்தர்கள், பிரபல எழுத்தாளர்கள் , சமூக இலக்கிய ஆர்வலர்கள், மகளிர் அணியின் மாவட்ட இணைப்பாளர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் வவுனியா மூன்று முறிப்பு அ.த.க.பாடசாலை நூலகத்திற்கு நூல்களும், வவுனியா இந்து அன்பக பெண்கள் காப்பகத்திற்குத் தேவையான பொருட்களும் வழங்கப்பட்டதோடு
மகளிர் அணி உறுப்பினர்களின் கவியரங்கம், பாடல்கள் மற்றும் அவர்களின் மழலைச் செல்வங்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.













