அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

Provincial
Editor 2026-08-31 16:11:00

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (31) கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய சேவைப் பிரமாணக் குறிப்பை வழங்கு!

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்று! சேவைப் பிரமாணக் குறிப்புகளை வழங்கு!

ஏமாற்றியது போதும். வாக்குறுதியளிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பை வழங்கு!

வாக்குறுதியளிக்கப்பட்ட எம்.என் - 5 சம்பளத் தரநிலையை வழங்கு!

விசேட தரத்துடனான பதவிஉயர்வு முறையை வழங்கு!

பயிற்சிக் காலத்தைச் சேவைக்காலத்துடன் சேர்!

முறையான கடமைப் பட்டியல்களை வழங்கு!

பட்டத்திற்குப் பொருத்தமான சம்பளத் தரநிலையில் நிலைநிறுத்து!

5 வருடங்களில் தரப் பதவி உயர்வுகளை வழங்கு!

விசேட தரப் பிரிவுடனான பதவிஉயர்வு முறையை வழங்கு!

அபிவிருத்தி உத்தியோகத்தரை அரச சேவை கட்டமைப்பினுள் முறையாக நிலைநிறுத்து!

இ.டி.ஓ. சேவையை ஸ்தாபித்திடு!

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை ஸ்தாபித்திடு!

இ.டி.ஓ. அலுவலகக் கொடுப்பனவை அதிகரித்திடு!

பயணக் கொடுப்பனவு ஒன்றை வழங்கு!

நிர்வாகச் செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்வதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை இ.டி.ஓ. இற்கு ஒதுக்கு!

பட்டதாரிகளுக்கு நீதி வழங்கு!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நீதி வழங்கு!

2027 வரவுசெலவுத் திட்டத்திலிருந்து 25,000 ரூ. இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்கு!

வாழ்க்கைச் செலவைத் தாங்க முடிய வில்லை. 25,000 ரூ. ஐ வழங்கு!

பெறும் சம்பளம் ஒரு வாரத்திற்கே போதாது! இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்கு!
எரிபொருள் கொடுப்பனவுகள் எம்.பிக்களுக்கு மட்டுமா?

போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டைத்தில் ஈடுபட்டனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail