ஈரானின் கார்க் தீவுக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பலில் இருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஈரானிய அதிகாரிகள் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை, மேலும் அமெரிக்க மத்திய கட்டளையகமும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இதேவேளை, ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை, ஹோர்முஸ் நீரிணையை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது: 3 எண்ணெய்க் கப்பல்களும், 3 அமெரிக்கக் கப்பல்களும் இலக்கு வைக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



