அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்தி்ல் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 767 சரக்கு விமானம் ஒன்று நேற்று (06) உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 11.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான அந்த விமானம், ஓடுபாதையில் மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓடுபாதையிலிருந்து விலகி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது மோதியது.
அதே நேரத்தில், விமானத்தில் தீப்பிடித்து எரிபொருள் கசிவு ஏற்பட்டது. மேலும், காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் விபத்து நடந்த நேரத்தில் மியாமி பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்த விபத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தில் விமான சேவைகளை நிறுத்திவைக்க அமெரிக்க சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



