கல்வியூடாக மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறோம்! - ரிஷாட் பதியுதீன்

Provincial
Editor 2026-09-14 08:42:00

எஸ்.எம்.எம்.முர்ஷித்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனியாக ஒரு குழுவை உருவாக்கி எவ்வாறு கல்வியினூடாக சமூகத்தை முன்னேற்றலாம் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
சமூகத்தை கல்வியினூடாக கட்டியெழுப்பி அதனூடாக சமுகத்தலைவர்களை உருவாக்கலாம். அந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்யலாம். நாட்டை அபிவிருத்தி செய்யலாம். நாட்டிலே இருக்கின்ற இனப்பிரச்சனையைத்தீர்த்து எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் கல்வியின் பால் நாம் அதிகமதிகம் எல்லோரும் இணைகின்ற நல்ல பணியைச்செய்ய வேண்டும். அப்பணியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்து வருகின்றது.

இன்று கௌரவிக்கப்படும் மாணவர் சமூகம் இன ஒற்றுமைக்காகவும் சமுக முன்னேற்றத்திற்காகவும் உழைக்க வேண்டும்.

கடந்த பொதுத்தேர்தல் முடிவு வெளியிடப்பட்டு நான் சந்தோசப்பட்டு சிறு நேரத்தில் அந்த சந்தோசம் இல்லாமல் போய்விட்டது அமைச்சர் அமீர் அலி தோல்வியடைந்து விட்டார் என்ற செய்திதான் அந்த கவலைக்கான காரணம் இந்த பிரதேசத்தை பற்றியும் அவர்களின் வாழ்வாதாரங்களைப்பற்றியும் சிந்திக்கின்ற மகனை இந்த மக்கள் நிறாகரித்தது மக்களின் துரதிஸ்டமே.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத்தொடர்பற்ற கல்வி வலயம் உருவாக்கியது இலகுவான காரியமல்ல அதற்காக அவர் பட்ட கஸ்டம் தியாகங்கள் எல்லாம் சொல்லில் அடங்காது அது போன்று இப்பகுதிக்கான வடிகால் அமைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் போடுவதற்கு அவர் அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்கவில்லை இருந்தும் அந்தஸ்துள்ள அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து இப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக எடுத்துக்கூறி அமைச்சரவையில் அனுமதி பெற்று அதனை பெற்றுத்தந்தார் அதன் நன்மைகளை இன்று அனுபவிக்கின்றீர்கள் அதே போன்று கல்வியில் எம்து பிரதேசம் முன்னேற வேண்டும் என்ற என்னத்தில் வீட்டுக்கொரு பட்டதாரி என்ற திட்டத்தை உருவாக்கி அதிலும் வெற்றி கண்டார்.

அவரை நீங்கள் நிறாகரித்து வேறு ஒருவரை ஆதரித்ததன் ஊடாக இப்பகுதி கண்ட அபிவிருத்தி என்ன நிருவாக ரீதியாக கண்ட பலன் என்ன முதியோர்கள் சொல்வார்கள் முத்தத்து மல்லிகை மனப்பதில்லை என்று அவ்வாறுதான் இப்பகுதியில் அவரது நிலையும் என்று தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 2025ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் அனைத்து பாடங்களிலும் "ஏ" சித்திகளைப்பெற்ற மாணவர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மத்தி மற்றும் கல்குடா கல்வி வலயங்களைச்சேர்ந்த 234 தமிழ், முஸ்லிம் மாணவர்களும் பிரதேசத்தின் முதலாவது பெண் திட்டமிடல் அதிகாரி மற்றும் பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைத்தோரும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சரும் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியூதீன் கலந்து கொண்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழக கணக்கியல்துறை பேராசிரியர் கலாநிதி எம்.சி.ஏ.நாசர் சிறப்புப்பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், பிரதேசத்தின் இலங்கை திட்டமிடல் சேவைக்காக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண்மணி எஸ்.டபிள்யூ.சரீன் சஸ்னா, அப்ரோன் குறூப் நிறுவனத்தலைவர் எஸ்.தினேஸ்குமார், கணக்காளர் எஸ்.ஏ.அஜ்வத், பிரதேச சபை உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், சமூக சொயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail