பத்தேகமவின் ஹல்பத்தோட்டை பகுதியில், காரில் வந்த ஒரு கும்பலால் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவு நடத்திய விசாரணையின்படி, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் இவர் நேற்று இரவு (29) ஹல்பத்தோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டபோது, சந்தேக நபரிடமிருந்து 06 கிராம் மற்றும் 100 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
கஹவத்தையைச் சேர்ந்த 23 வயதான சந்தேக நபர், பத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அந்த சந்தேக நபர் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



