போதைப்பொருளுடன் மூவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது!

crime
Editor 2026-10-10 11:31:00

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் போதை வியாபாரத்தில் ஈடுபட்ட மூவருடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும்  வியாழக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயசாந்த தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஆகியோரின் ஆலோசனைக்கமைய  மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனையை தடுக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள்  இடம்பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர்; எம்.எஸ்.எம். ஜரூலின் ஆலோசனையின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரத்ன மற்றும் பதில் பொறுப்பதிகாரி ஜயசாந்த ஆகியோரின் வழிகாட்டலில் இடம் பெற்ற இச் சுற்றிவளைப்பின் அடிப்படையிலயே இப் போதைப்பொருள் வியாபாரிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர்களான திலங்காவல தலைமையிலான ஆர்.பி.ஏ.கோசல, எம்.ஏ.எம்.அக்ரம், பொலிஸ் விஷேட பிரிவை சேர்ந்த எம்.பயாஸ், ஆர்.விஜிதரன் அடங்கலான குழுவினர் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போதே இச் சந்தேக நபர்களும் இவர்களிடம் இருந்து என்பது கிராம் 410 மில்லிகிராம் அடங்கலான ஐஸ் போதைப் பொருளும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி மாஞ்சோலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 35 வயது நபரிடம் இருந்து 08கிராம் 980மில்லிகிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதுடன் அவரிடம் நடாத்தப்பட்ட விசாரணையின் போது 48 வயதுடைய வியாபாரி ஒருவர் ஓட்டமாவடி தியாவட்டுவான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து 20 கிராம் 590 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டன.

தியாவட்டவான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபர் தனக்கு கொழும்பில் இருந்துz பொருட்கள் வருவதாகவும் இதனை தனியார் பஸ்ஸில் சாரதியாக கடமையாற்றும் நபர் கொண்டு வந்து தருவதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சாரதி ஆரயம்பதியை சேர்ந்தவர் என்றும் அவர் ஐஸ் போதைப் பொருளை ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் விஷேட பொலிஸ் குழுவினரால் கும்புறுமூலை பிரதேசத்தில் வைத்து குறித்த சாரதியை கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் 840 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதி பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail