முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் மகன் யோஷித ராஜபக்க்ஷ மீது பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (15) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணையின்போது, யோஷித ராஜபக்க்ஷ கடற்படையில் பணியாற்றியபோது பெற்ற சம்பளம் குறித்து ஒரு கடற்படை அதிகாரி சாட்சியம் அளித்தார்.
அதன்படி, யோஷித ராஜபக்க்ஷ தனது கடற்படைப் பணியின்போது சுமார் 5,150,626 ரூபா சம்பளம் பெற்றார் என்பது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
மேலும், இதில் கொடுப்பனவுகள் அடங்காது என்றும் அந்த சாட்சி கூறினார்.



