இயந்திரப்படகு மின் தாக்கத்தில் சேதம்!

News
Editor 2026-10-21 13:48:00

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற இயந்திரப் படகொன்று மின் தாக்கத்தில் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (20) இரவு 7.30 மணியளவில் வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் இருந்து சுமார் இருபது கிலோ மீற்றர் தொலைவில் வைத்து இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.எம்.அமீர் ஹாஜியார் என்பவருக்கு சொந்தமான IMUL - A - 0251 MTR இலக்க இயந்திரப் படகில் மீன் பிடிப்பதற்காக நான்கு பேர் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பாரிய மின் தாக்கத்தில் இயந்திரப் படகில் பொருத்தப்பட்டிருந்த பி.எம்.எஸ், ஏ.எஸ்.ஐ, மற்றும் இயந்திரப் படகு வானொலி உள்ளிட்ட உபகரணங்கள் மின் தாக்கி கருகி சேதமடைந்துள்ளன.

இவ்வாறு மின் தாக்கத்தில் சிக்கிக் கொண்ட மீனவர்கள் எவ்வித ஆபத்துக்களுமின்றி இன்று (21) அதிகாலை ஒரு மணியளவில் பாதுகாப்புடன் வாழைச்சேனை துறைமுத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் படகு உரிமையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail