கிராண்ட்பாஸில் பெண் கைது!

crime
Editor 2026-10-22 12:28:00

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து ஒரு கிலோ கிராம் 45 கிராம் ஐஸ், ஒரு கிலோகிராம் 86 கிராம் ஹெரோயின், ஒரு மின்னணு தராசு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ரூ. 8,50,000 மற்றும் ஒரு கைத்தொலைபேசி ஆகியவை கைப்றப்பட்டன.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 46 வயதான அந்த சந்தேக நபர், மாளிககந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail