பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் இன்று (23) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சமர்ப்பித்த பிணை மனுவை நிராகரித்து, அவர்களை நவம்பர் 6 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.



