ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ உள்ளிட்ட ஒரு குழுவினருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஒரு குழுவினருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு குறிப்பிடுகிறது.



