தவறான முடிவை எடுத்து தனது உயிரை மாய்க்க முயன்றாரா ஞனசார தேரர்?

News
Editor 2026-10-27 07:51:00

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தான் எதிர்கொண்ட நெருக்கடியின் காரணமாகத் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்  கொள்ளும் எண்ணம் குறித்து ஓர் அமைச்சரிடம் தெரிவித்திருந்ததாகவும்  ஆனந்தஸ்ரீ தேரர் கூறுகிறார்.

ஞானசார தேரர் கைது செய்யப்படுவதற்குச் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ‘நமயை பஹா’ என்ற தனது நூலை வெளியிட்ட நிகழ்வை நினைவு கூர்ந்த ஆனந்தஸ்ரீ தேரர், தனது தாயார் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த சூழலில், தனக்காகத் தலையிடுமாறு  மகாநாயக்க தேரர்களிடம் அந்தத் தேரர் மனமுவந்து வேண்டிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பில் இருந்த நடைமுறைக் குறைபாடுகளின் காரணமாகவே இந்த விதியை சந்திக்க நேர்ந்ததாகவும், தாம் கடும் அதிர்ச்சியிலும் மன அழுத்தத்திலும் இருப்பதாகவும் ஞானசார தேரர் தெரிவித்தாகவும்  ஆனந்தஸ்ரீ தேரர் கூறியுள்ளார்


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail