களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக, ருவான்வெல்ல, சீதாவக்கை, தொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹுபிட்டிய ஆகிய 7 பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.



