அடுத்த 12 மணி நேரத்துக்கு வங்காள விரிகுடா மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை நிலவும் என வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ என்ற கடுமையான சூறாவளி, மேலும் வலுப்பெற்று ‘மிகக் கடுமையான புயலாக’ மாறியுள்ளது. இன்று (27) அதிகாலை 02.30 மணியளவில் இது, காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கில், 15.9° வடக்கு அட்சரேகை மற்றும் 85.4° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.
இது இன்று மாலை 05.30 மணி வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை 11.30 மணிக்குள் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்து இந்திய நிலப்பரப்பை நோக்கிச் செல்ல அதிக வாய்ப்புள்ளது.





