பிணையை இரத்துச் செய்யக் கோரி மனுத் தாக்கல்!

News
Editor 2026-10-30 13:20:00

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற “ஹரக் கட்டா”வின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக ரகித ராஜபக்க்ஷ சரித் அபேசிங்க மற்றும் வருஷ ஹென்னடிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோர் ஜூன் 25 அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் பின்னர் பலமுறை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர ஜூலை 28 அன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம், தலா 100,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவித்தது.

இதேவேளை, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு,  ரகித ராஜபக்க்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்கிய கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை  இரத்துச் செய்யக் கோரி, கொழும்பு உயர் நீதிமன்றத்தில்  சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு இன்று (30) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail