வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட அளவு வரிகள் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அறிஞர்கள் அமைப்பின் தேசிய மாநாட்டில் இன்று (31) பங்கேற்றபோது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில்,
“பட்ஜெட் முன்மொழிவுகள் மூலம் வருவாயை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பட்ஜெட் ஆவணங்கள் வெறும் நடைமுறை நோக்கங்களுக்காக மட்டுமே சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களாக மாறிவிட்டன.
அந்த ஆவணங்களில் உள்ள இலக்குகளை நாங்கள் அடையவில்லை. அந்த ஆவணங்கள் ஒரு நோக்கத்துக்காக மட்டுமே இருந்தன.
வரவிருக்கும் பட்ஜெட்டில் சில வரிகளைக் குறைப்போம். ஆனால் அது வருமான இலக்கத்துக்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் இருக்கும் என்றார்.



