ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள சக்தியும் இணைந்து செயற்படுவதன் மூலம் அரசியல் வெற்றியை அடையும் என்று நம்பப்பட்டாலும், அத்தகைய வெற்றியைப் பாரம்பரிய அரசியல் வழிமுறைகள் மூலம் அடைய முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகிறார்.
தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய வழிமுறைகள் மூலம் இனி முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அரசியல் வெற்றிகளை நோக்கி நகர்வதற்கு புதிய தலைமுறையினரின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகிறார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு குறிப்பிட்டார்,
"இது ஒரு புதிய பிம்பம், மேலும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். அரசியலைப் பார்த்தால், உலக அரசியல் மாறிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு வாக்களித்தவர்களில் இருந்து எதிர்கால வாக்காளர்களை நான் காண்கிறேன்; இன்று 16-15 வயதுடையவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் நுழைகிறார்கள்."
அதாவது ஜென் Z தலைமுறையினர் சுமார் 8 மில்லியன் பேர் உள்ளனர். புதிய குழுக்கள் உருவாகியுள்ளன, நாம் இந்தக் குழுக்களைப் பற்றி சிந்தித்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



