ஐ. நா மனித உரிமைகள் உயர் ஆணையர் இளவரசர் செயித் அல் ஹுஸைன் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, கொழும்பு, தும்முல்லவில் உள்ள ஐ.நா. அலுவலகம் அருகே வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (02) வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, பிணையில் வெளிவந்துள்ள விமல் வீரவன்ச உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இதன்போது, முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, வழக்கை டிசம்பர் 7ஆம் திகதி விசாரிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
2016-ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் இளவரசர் செயித் அல் ஹுஸைன் இலங்கைக்கு வருகை தந்தபோது, கொழும்பு, துன்முல்லவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தைச் சுற்றி வீதிகளை மறித்தும், போராட்டத்தில் ஈடுபட்டும் பொதுமக்களுக்குத் சிரமங்களை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக குருந்துவத்த பொலிஸார் இந்த வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், வீரகுமார திஸாநாயக்க, ஜயந்த சமரவீர, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பிரதிவாதிகள் ஆவர்.



