பொலிஸ் OIC பணி நீக்கம்!

News
Editor 2026-11-03 08:09:00

அக்குரஸ்ஸ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு அதிகாரியை (OIC) உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு எதிராக வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான விசாரணையின் போது, ​​அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம்  தமிழ் -சிங்களப் புத்தாண்டு தினத்தன்று அக்குரஸ்ஸவில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட ஒரு குழுவினரைக் கைது செய்து, அவர்களிடம் இருந்து 500,000 ரூபாயைக் கொள்ளையடித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail