அக்குறணை குடுகல பகுதியில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் இன்று (04) காலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தால் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



