கொடவில பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டவருமான பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவை இன்று (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் 3ஆம் திகதி உத்தரவிட்டது.
அதன்படி, இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வருணி போகஹவத்த மற்றும் மேலும் ஐந்து சந்தேக நபர்களை அடுத்த 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதம நீதிவான் சத்துர திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.து.
விசாரணைகளை முடித்து, அடுத்த 20 ஆம் திகதி இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்ததுககுத் தெரிவித்துள்ளது.
ஒரு காரை வாங்குவதற்கும் அதன் குத்தகைத் தவணைகளைச் செலுத்துவதற்கும் பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கான விளக்கத்தை சரியாக வழங்கத் தவறியதற்காக வருணி போகஹவத்தையை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்தது.



