கொடவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரான சம்மிக விக்ரமசிங்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
வருணி போகஹாவரத்தவை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறுமாத்தறை பிரதம நீதிவான், 6ஆம் திகதி உத்தரவிட்டார்.
ஒரு காரை வாங்குவதற்கும் அதன் குத்தகைத் தவணைகளைச் செலுத்துவதற்கும் பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பதைச் சரியாக நிருபிக்கத் தவறிதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வருணி போகஹவத்தவைக் கைது செய்தது.



