நீதிமன்ற உத்தரவையும் மீறி, பிக்குகள் உட்பட குழுவினர் தொடர்ந்தும் சத்தியா கிரகத்தில்!

News
Editor 2026-11-09 12:51:00

ருவன்வெலிசய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித இடங்களைக் காலி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், பெளத்த பிக்குகள் மற்றும் பிற  குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகம் இன்று (09) மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

பலாங்கொட கஸ்ஸப தேரர், துறவிகள் மற்றும் ஒரு பொதுமக்கள் குழுவினர், அநுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசய அருகே உள்ள விஹாரை வளாகத்தில், அநுராதபுர புனித நகரத் திட்டத்துக்கு எதிரான இந்த சத்தியாகிரகத்தை  07 ஆம் திகதி காலையில் தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் அந்த இடத்தில் ஒரு பரணைக் கட்ட முயன்றதால், அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது.

அநுராதபுர பொலிஸ் தலைமையக பரிசோதகர், அநுராதபுரம்  நீதிவான் நீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, ருவன்வெலிசயா மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித இடங்களை விட்டு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட குழுவினர் வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், நீதிமன்ற உத்தரவையும் மீறி, பிக்குகள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் அந்த இடத்தில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்,  பாலங்கொட கஸ்ஸப்ப தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நேற்று இரவு (08) சம்பவ இடத்துக்கு சென்றனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail