பதுளை பகுதியில் போதையில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்று 79 வயது பாதசாரியை காயப்படுத்திய வழக்கில், ஹாலி ஏல பொரிஸ நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவர் நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸின் தகவல்படி, நவம்பர் 6 ஆம் திபதி பதுளை-ஸ்பிரிங்வெளி வீதியில் உள்ள சுபத்ராராமய அருகே, அந்த அதிகாரி ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டி ஒரு பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்த பாதசாரி பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணையில், 48 வயதான அந்த பொலிஸ் சார்ஜன்ட் முச்சக்கர வண்டியை ஓட்டும்போது மது அருந்தியிருந்தது தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மது அருந்தியிருந்ததை உறுதி செய்ததாகவும், அவரது இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அலட்சியமாகவும், கவனக் குறைவாகவும், மதுபோதையிலும் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் நவம்பர் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் நவம்பர் 8 ஆம் தேதி பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நவம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



