இலஞ்சம் பெற்றதற்காக சுங்கப் பாதுகாப்பு அதிகாரி கைது!

News
Editor 2026-11-12 21:57:00

சுங்கத்திலிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களை விடுவிப்பது தொடர்பான ஆவணங்களை வழங்குவதற்காக  30,000  ரூபா இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சுங்கப் பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம்,  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், இலங்கை சுங்கத் தலைமை அலுவலகத்தில் இன்று (12) பிற்பகல் சுமார் 2.25 மணியளவில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாடடுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை சுங்கத்திலிருந்து விடுவிக்கத் தேவையான ஆவணங்களைப் முறைப்பாட்டாளருக்கு வழங்குவதற்காக, ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 15,000 ரூபா வீதம் 30,000 ரூபாவை  இலஞ்சம் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail