நீதிமன்ற உத்தரவுகளை மீறி அநுராதபுரத்தில் உள்ள ருவன்வெலி சயா அருகே சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட ஏழு பேர் நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தவிர, இந்தக் குழுவில் மேலும் ஆறு பேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜங்கனையைச் சேர்ந்த சத்தரத்னன் தலைமையிலான குழுவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட இவர்கள் நேற்று (12) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.



