கிரிஸ் ஒப்பந்தம் தொடர்பாக விளககமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் ஆநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்த முடிவு இம்மாதம் 18 ஆம் திகதி அன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லால் பண்டாரா பிறப்பித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் நாமல் ராஜபக்க்ஷவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



