சமூக ஊடக காணொளிப் படைப்பாளியான நவோமி  வீரவர்தனவின் உயிர் பிரியும் இறுதித் தறுவாய்...!

News
Editor 2026-11-14 10:36:00

ஜப்பானில் அண்மையில் இடம்பெற்ற பிரசவம் ஒன்றின்போது துயரமான முறையில் காலமான, பிரபல சமூக ஊடக காணொளிப் படைப்பாளியான நவோமி சான் வீரவர்தனவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் பதிவிடப்பட்ட ஒரு புதிய காணொளியைக் கண்டு அவரது இரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளி, நவோமி தனது குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த காணொளிகளின் தொகுப்பாகும், ஆனால் அவரால் அவற்றை முழுமையாகப் படம்பிடிக்க முடியவில்லை. அவரது திடீர் மரணத்துக்குப் பிறகு, அவரது கணவர் கெச்சான் இந்தக் காணொளியை அவரது கணக்கில் சேர்த்ததாகப் பல இரசிகர்கள் நம்புகிறார்கள்.

மிகவும் உணர்ச்சிபூர்வமான இந்தக் காணொளியில், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு நவோமி தனது செல்லப் பூனையான 'ஹரு'வுடன் கழித்த கடைசித் தருணங்களும் பதிவாகியுள்ளன.

மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு அந்தப் பூனை விசித்திரமாகவும் பயத்துடனும் நடந்து கொண்டதாக, காணொளியைப் பார்த்த பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அவர் சிரமத்துடன் சுவாசிப்பதும், குழந்தையின் நிலையைக் கண்காணிக்கும் இயந்திரங்களின் (CTG) ஒலிகளும் இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன.

தன் மனைவியின் கடைசி விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு வழியாக கெச்சன் இந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கலாம் என்று ஊகித்த இரசிகர்கள், அதில் எழுதப்பட்டிருந்த #foreverlove போன்ற ஹேஷ்டேக்குகள் குறித்தும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். இந்தக் காணொளி வெளியான குறுகிய நேரத்திலேயே ஏழாயிரத்துகும் மேற்பட்ட பதில்களைப் பெற்றதானது அவரது குரலையும் உருவத்தையும் மீண்டும் பார்ப்பது இன்னும் ஒரு கனவு போலவே இருப்பதாகப் பலர் வெளிப்படுத்தினர்.

நவோமியின் இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது என்றாலும், அவர் இந்த உலகுக்கு அளித்த அந்தச் சின்ன மகனுக்காக, வாழ்க்கையைத் தைரியத்துடன் எதிர்கொள்ளுமாறு ஆயிரக்கணக்கான இலங்கை இரசிகர்கள் அவரது கணவர் கேச்சனிடம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குழந்தையை வரவேற்கும் ஆயிரம் நம்பிக்கைகளுடன் மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருந்த நவோமியின் இறுதிக் காட்சிகள், அவரை நேசித்த அனைவரின் கண்களிலும் மீண்டும் கண்ணீரை வரவழைத்துள்ளன.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail