தம்புத்தேகமவில் உள்ள ராஜங்கனை வீதி, 3 ஆவது தூண் பஸ் நிறுத்துமிடம் அருகே ஒரு கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான 9 தோட்டாக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நிக்கவெரட்டிய பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பயணித்த இருவரில் ஒருவரிடமிருந்து 4 கைத்துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றினார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் அந்த இடத்திலேயே அதனைக் கைவிட்டு தப்பி ஓடிவிட்டார், அதே நேரத்தில் பின்னால் வந்தவரை சோதனைக்கு உட்படுத்தியபோது அவர் பொலிஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.
இருப்பினும், அந்த முயற்சி தோல்வியடைந்தது, பின்னர் சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தம்புத்தேகம பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கிருந்து ஒரு பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்.கு வந்து விசாரணையைத் தொடங்கியது.
வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் சந்தேக நபர்களால் அருகிலுள்ள விதியில் கைவிடப்பட்டிருந்தய மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸ் பிரிவின் கீழ் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தம்புத்தேகம பொலிஸ் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



