இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 60 - 70 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் பயணத்தைத் தவிர்க்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு அறிவுறுத்துகிறது.
மேலும், இந்த அமைப்பானது இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து வடக்கு நோக்கியும், வடமேற்கு நோக்கியும் நகர்ந்து, இன்று காலைக்குள் (16) ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், இரவில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் ஒரு 'புயலாகவும்' உருவாக வாய்ப்புள்ளது.
மேலும், நாளைக்குள் (17) மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் இது கடுமையான சூறாவளி புயலாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது



