சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது!

News
Editor 2026-11-18 18:07:00

சட்டவிரோத வெளிநாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்துக்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுச் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (18) உறுதி செய்தது.

சிறைத் தண்டனைக்கு எதிராக சசி வீரவன்ச தாக்கல் செய்த மேல்முறையீட்டைப் பரிசீலித்த பின்னர், பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜரான சசி வீரவன்சவை உடனடியாக விளக்கமறியலில் வைத்து, உரிய தண்டனையை நிறைவேற்றுவதற்காக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail