ஞானசார தேரரின் கடூழியச் சிறைத் தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

News
Editor 2026-11-18 17:01:00

கொழும்பு உயர் நீதிமன்றத்தால்  கலகொடத்த ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) உறுதி செய்தது.

தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக்  கோரி  ஞானசார தேரோ தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து இந்த உத்தரவை அமர்வு பிறப்பித்தது.

இஸ்லாத்தை அவமதித்ததற்காகவும் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தைத் தடுக்கும் வகையில் செயற்பட்டதற்காகவும், இலங்கை தண்டனைச் சட்டத்தின் 291ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபர்  வழக்குப் பதிவு செய்திருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஞானசார தேரோவுக்கு, 2024-ஆம் ஆண்டில் கொழும்பு உயர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழியச் தண்டனை விதித்தது. ஞானசார தேரோ அந்தத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail