காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்; உடல்நலப் பாதிப்பு ஏற்படும் அபாயம்!

News
Editor 2026-11-18 09:41:00

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் இன்று (18) காலை 7.30 மணிக்கு வெளியிடப்பட்ட காற்றின் தரக் குறியீட்டின்படி (AQI), நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் மிக உயர்ந்த காற்றின் தரக் குறியீட்டு மதிப்பான 186 பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் 170, சிலாவத்தில் 162, அனுராதபுரத்தில் 165 மற்றும் பத்தரமுல்லவில் 166 எனப் பதிவாகியுள்ளது.

அதேபோல், திருகோணமலையில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்புகளான 156 மற்றும் 154 ஆகியவையும் பதிவாகியுள்ளன.

இந்தப் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், பொதுமக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், எல்லவில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 101 ஆகப் பதிவாகியுள்ளது, இது சற்றே ஆரோக்கியமற்ற நிலையாகும்.

இரத்தினபுரிப் பகுதியில் 96 என்ற மதிப்பு பதிவாகியுள்ளது, இது மிதமான நிலையாகக் கருதப்படுகிறது.

காற்றின் தரக் குறியீட்டின்படி, 0 முதல் 50 வரையிலான மதிப்புகள் நல்ல நிலைகளாகவும், 51 முதல் 100 வரையிலான மதிப்புகள் மிதமான நிலைகளாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

101 முதல் 150 வரையிலான மதிப்புகள் சற்றே ஆரோக்கியமற்ற நிலைகளாகவும், 151 முதல் 200 வரையிலான மதிப்புகள் ஆரோக்கியமற்ற நிலைகளாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

அதேபோல், 201 முதல் 300 வரையிலான மதிப்புகள் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைகளாகவும், 301 முதல் 500 வரையிலான மதிப்புகள் அபாயகரமான நிலைகளாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

அதன்படி, அதிக அளவு காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail