இலஞ்சம் கோரிய காதி நீதிவானும் மனைவியும் கைது!

News
Editor 2026-11-19 08:55:00

65,000 ரூபா இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு வடக்கு காதி நீதிமன்ற நீதிவானும் அவரது மனைவியும் இலஞ்சம் , ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிவானின் மனைவி கொழும்பு வடக்கு காதி  நீதிமன்றத்தின் செயலாளராகவும் இருந்தார் என இலஞ்ச ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு விவாகரத்து வழக்கில் தாமதமின்றி தீர்ப்பு வழங்குவதற்காக அவர்கள் இந்த இலஞ்சப் பணத்தைக் கோரியிருந்தனர். இது தொடர்பாகப் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்சம்  ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இவர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான நீதிவானும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail