சர்ச்சைக்குரிய கிருஷ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை டிசம்பர் முதலாம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (20) இலஞ்ச ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டது.
சந்தேக நபரான ஜானகி சிறிவர்தனவை டிசம்பர்முதலாம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜக்பக்ஷ சிறையில் இருந்தால், அவரை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.



