இம்ரான் கானுக்காக சஜித் பிரேமதாச!

News
Editor 2026-11-20 14:44:00

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் முன்னாள் பிரதமர்  இம்ரான் கானுக்கு மனிதாபிமான கவலைகளை முன்னிறுத்தியும், இலங்கை அவருக்கு ஆதரவை நல்கும் பொருட்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்  ஆலோசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இந்த வாரம் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்துள்ளது.

ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாலும், சனிக்கிழமை முதல் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதங்கள் இடம்பெறும் நிலைக்கு மத்தியிலும் சனிக்கிழமை (21) இப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தடுப்புக் காவலில் உள்ள இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி பிரதான எதிர்க்கட்சி இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்துள்ளது.

இம்ரான் கானுக்கு போதுமான மற்றும் சுயாதீனமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியும்,
அவரது விடுதலை, உரிய நடைமுறை மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப பிற பொருத்தமான நிவாரணங்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் உறுதி செய்வதும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.  

சர்வதேச கிரிகெட் நட்சத்திரமும், தஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஸ்தாபகருமான இம்ரான் கானுக்கு ஆதரவாகப் பாகிஸ்தானிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு அரசியல், மனிதாபிமான மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த ஆதரவுக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் பின்னனியிலேயே இலங்கை பாராளுமன்றத்திலும் பிரதான எதிர்க்கட்சி இந்த பிரேரணையைக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail