பெருந்தோட்டச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி, 2,500க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுமார் 4 பில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், தனியார் நிறுவனமொன்றின் 2 பணிப்பாளர்கள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அந்த இரண்டு நிறுவனங்களின் மூன்று பணிப்பாளர.களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கண்டி மற்றும் கொஹுவளையில் அமைந்துள்ள இந்த நிறுவனங்களால் செய்யப்பட்ட நிதி மோசடியின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 4 பில்லியன் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு 80 முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (21) நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர், மேலும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



