மஹிந்த ராஜபக்க்ஷ தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மேற்கொண்ட பல பயணங்களுக்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 96.22 மில்லியன் ரூபா (தொண்ணூறு கோடியே இருநூற்று இருபதாயிரம் ரூபா) தொகையை இன்னும் செலுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, ஷிரந்தி ராஜபக்க்ஷ, யோஷித ராஜபக்க்ஷ, பேராசிரியர் ஜீய.எல். பீரிஸ், சஜின் வாஸ், பீலிக்ஸ் பெரேரா மற்றும் லலித் வீரதுங்க உள்ளிட்ட ஒரு குழுவினர், 2014-ஆம் ஆண்டில் மேற்கொண்ட பல வெளிநாட்டுப் பயணங்களுக்காக இந்தத் தொகையைச் செலுவிட்டதாக கூறப்படுகிறது.
பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்இ இதைத் தெரிவித்தார்.
2014-ஆம் ஆண்டில், ஷிரந்தி ராஜபக்ஷ, ஜீ.எல். பீரிஸ், சஜின் வாஸ், லலித் வீரதுங்க உள்ளிட்ட 59 பேர் மாலைதீவு மற்றும் செஷல்ஸுக்கு பயணம் மேற்கொண்டனர், ஆனால் ஜனாதிபதி செயலகம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு ரூ. 20.35 மில்லியனை இன்னும் செலுத்தவில்லை என்று அமைச்சர் கூறினார்.
2014 அக்டோபரில் ஷிரந்தி ராஜபக்க்ஷ, ஜி.எல். பீரிஸ், சஜின் வாஸ் குணவர்தன, பீலிக்ஸ் பெரேரா உள்ளிட்ட 70 பேர் இத்தாலிக்குச் சென்றதாகவும், அவர்களுக்கான 43.47 மில்லியன் ரூபா இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், 2014 நவம்பரில் 43 பேர் நேபாளம் சென்றதால்28.8 மில்லியன் ரூபாவை இழந்ததாகவும், 2014-ல் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் யோஷித ராஜபக்க்ஷ உள்ளிட்ட 57 பேர் திருப்பதி சென்றதால் 3.6 மில்லியன் ரூபா இழக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



