தந்திரகார தந்தை,மகன் உட்பட மூவர் கைது!

News
Editor 2026-11-23 08:44:00

லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிறத்தில் வண்ணம் பூசி, அவற்றை லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள போன்று தோற்றமளிக்கச் செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கொட்டதெனிய பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களும், மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 20 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக வண்ணம் பூசப்பட்ட இந்த எரிவாயு சிலிண்டர்களை, பழைய மற்றும் முன்பே பயன்படுத்தப்பட்ட சிலிண்டர்கள் போலக் காட்டுவதற்கு, சந்தேக நபர்கள் ஒரு நுட்பமான தந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதன்படி, இந்த சிலிண்டர்கள் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டவை போலத் தோற்றமளிப்பதற்காக, அப்பக் கலவைகள் மற்றும் மிளகாய் சாஸ் போன்ற மசாலாப் பொருட்களும் உணவுப் பொருட்களும் அவற்றின் மீது பூசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail